கபாலியுடன் தைரியமாக களமிறங்கும் கன்னி

201607191630446780_Avarum-Kanniyum-release-kabali-release-date_SECVPF

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் வருகிற ஜுலை 22-ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளிவருகிறது. உலகம் முழுவதிலும் சுமார் 12 ஆயிரம் திரையரங்குகளில் இப்படம் திரையிடப்போவதாக சொல்லப்படுகிறது. தமிழகம் உள்பட இந்தியாவிலும் இப்படம் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

‘கபாலி’ படமே நிறைய திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளதால், வேறு எந்த படங்களும் திரையரங்கு கிடைக்காத சூழ்நிலை உள்ளது. இதனை புரிந்துகொண்ட சில தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களின் ரிலீஸ் தேதிகளை தள்ளி வைத்துள்ளனர். அதேபோல், இந்தியா அளவிலும் ‘கபாலி’ வெளியாகும் நாளில் எந்த படங்களும் ரிலீஸ் ஆகவில்லை.

இந்நிலையில், தற்போது ‘கபாலி’ வெளியாகும் நாளில் ‘எம்டன் மகன்’, ‘அழகிய தமிழ் மகன்’ ஆகிய படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்த கிருபா கதாநாயகியாக நடித்த ‘அவரும் கன்னியும்’ என்ற திரைப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இப்படம் மலையாளத்தில் வெளிவந்த ‘பிதாவும் கன்யகாயும்’ படத்தின் டப்பிங் ஆகும். முறை தவறிய உறவு எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இப்படம் எடுத்துக்கூறுகிறது. இப்படத்தை ரூபேஷ் பால், சஜீவ் மேனன் என இரண்டு பேர் இயக்கியிருக்கிறார்கள்.

பெரிய பெரிய தயாரிப்பாளர்களெல்லாம் ‘கபாலி’ படத்திற்கு பயந்து ஒதுங்கி நிற்கும் வேளையில், சிறு பட்ஜெட்டில் உருவான இப்படம் ‘கபாலி’க்கு போட்டியாக தைரியமாக களமிறங்கியுள்ளது. வருகிற ஜுலை 22-ந் தேதி ‘அவரும் கன்னியும்’ வெளியாகிறது. ஆனால், சென்னை, செங்கல்பட்டு ஏரியாவை தவிர்த்து தமிழகமெங்கும் இப்படம் திரையிடப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *