நடிகர் கமல் நேரில் ஆஜராக வேண்டும் : மஹாபாரதத்தை இழிவு படுத்தியதாய் தொடரப்பட்ட வழக்கில் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!!!

மகாபாரதத்தை அவமதித்தாக கமல் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில், அவர் நேரில் ஆஜராகும்படி வள்ளியூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளிக்கும்போது இந்துக்களின் புனித நூலான மகாபாரதத்தையும், இந்துக்களின் கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்தி பேசியதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியது.

இதையடுத்து நடிகர் கமலஹாசனுக்கு எதிராக தமிழத்தில் பல்வேறு இடங்களில் முழுவதும் இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்தியது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மீது நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த பழவூரை சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர் வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் மகாபாரதத்தை இழிவுப்படுத்தி அவதூறாக பேசியுள்ள நடிகர் கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கின் அடிப்படையில் வருகிற மே 5-ந் தேதி நடிகர் கமல்ஹாசன் நேரில் ஆஜராகவேண்டும் என்று வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *