‘தோனி கபடி குழு’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆரி ஆவேச பேச்சு..!!!

‘தோனி கபடி குழு’ படத்தின் தயாரிப்பாளர் நந்தகுமார் நம் கலாச்சாரம் சார்ந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார். அதற்கு எனது பாராட்டுக்கள்.

தமிழ் சினிமா ‘குடி’யை நம்பி இல்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. ஒவ்வொரு இயக்குநருக்கும் தன்னுடைய முதல் படம் வெளியாகும் வரைக்கும் பல வித துன்பங்கள், இடையூறுகள், தடைகள், மன உளைச்சல்கள் போன்றவை இருக்கும். ஆனால், இப்படத்தின் இயக்குநர் ஐயப்பனிடம் அவை எதுவும் இல்லாமல் யதார்த்தமாகப் பேசியதிலிருந்து இப்படம் எந்தளவுக்கு தரத்தோடு இருக்கும் என்பதை உணர முடிகிறது. இப்படத்தில் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அது சாதாரண செயல் அல்ல.

‘இரட்டைச்சுழி’ படத்திலிருந்தே லீமாவைத் தெரியும். குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். சினிமா பின்னணியில்லாத ஒரு பெண் இன்று கதாநாயகியாக வளர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்போதெல்லாம் படம் வெளியாவது அவ்வளவு எளிதல்ல. வெளியில் உள்ள அரசியலை பேசுவதற்கு முன்பு சினிமாவில் இருக்கும் அரசியலைப் பற்றி பேச வேண்டும். இன்றைய சூழலில் எந்த மாதிரியான படமாக இருந்தாலும் திரையரங்கிற்கு சென்றால் பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டுதான் உள்ளது. அது ‘சர்காரில்’ ஆரம்பித்து ‘தோனி கபடி குழு’ வரையில் பிரச்னை இருக்கத்தான் போகிறது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், அவரவர்களுக்கு தன்னுடைய படங்கள் தான் நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, சினிமா நல்லா இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. பெரிய படம் வந்ததால் சிறிய படங்கள் ஓடவில்லை என்று இன்று கூட செய்திகள் வந்தது. EC உறுப்பினர்கள் இருவர் ராஜினாமா செய்துவிட்டார்கள்.

சினிமா மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறது. இதை இப்படியே விட்டுவிட்டால் வருங்காலத்தில் மொத்த தமிழ் சினிமாவும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் சென்றுவிடும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *