தாய்ப்பாலுக்கு நிகரான “அசையேந்தி” நாட்டுமாட்டு பால்…!!!

கேப்டன் தொலைக்காட்சியில் செய்தி சேகரிப்பு ஒளிப்பதிவாளராக பணிபுரியும் திரு.சந்திரசேகர் திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலம் கிராமத்தில் முற்றிலும் வித்தியாசமான நாட்டுமாட்டு பண்ணை ஒன்றை வெற்றிகரமாக பராமரித்து வருகிறார்.

இப்பண்ணையில் பழமையான பாரம்பரிய வகையை சேர்ந்த கிர்,காங்கிரேஜ்,மற்றும் சாஹிவால் இன பசுக்கள் மற்றும் காளைகள் பராமரிக்கப்படுகின்றன.இவ்வகை நாட்டுமாடுகள் வடநாட்டில் குஜராத் பகுதிகளில் மட்டுமே தற்போது காணப்படுகின்றன.

இந்த நாட்டுமாட்டுகளில் இருந்து பெறப்படும் பால் எவ்வகை கலப்படமும் இன்றி முழு ஊட்டசத்துடன் வாடிக்கையாளருக்கு வழங்கப்படுகின்றன.மாட்டிற்கு வைக்கப்படும் உணவு தீவனத்தில் தொடங்கி அவைகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை வரை அனைத்திலும் நம் பழைய இயற்கைவழி பாரம்பரிய முறை கையாளப்படுவதால் இவை தரும் பால் மற்றும் இதர தயாரிப்பான தயிர்,நெய்,வெண்ணை போன்ற பொருட்களும் கலப்படமற்ற இயற்கைமுறை உணவாக வாடிக்கையாளருக்கு சென்று சேர்க்கிறது.

குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு அடுத்த முக்கிய ஆரோக்கிய உணவாக “அசையேந்தி”பால் திகழ்வதால் அவர்கள் மருத்துவமனைக்கு செல்வது 90% வரை தவிர்க்கப்படுகிறது.

இந்த அரிய பணியை செய்துவரும் நண்பர் திரு.சந்திரசேகர் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்…!!!
இலவச டோர் டெலிவரிக்கு தொடர்பு கொள்ள-9384507186/87.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *