“சிவா மனசுல புஷ்பா” படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க மறுக்கும் நடிகை

‘சிவா மனசுல புஷ்பா’ என்ற பெயரில் வாராகி இயக்கி நடித்துள்ள படத்திற்கு சென்சார் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டைட்டிலை மாற்றினால் தான் சென்சார் செய்வோம் என நடிகை கௌதமி அடாவடி செய்வதாக இயக்குனர் தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.

படத்தின் டைட்டிலும் கதாபாத்திர பெயர்களும் நிஜத்தில் இருக்கும் சிலரை குறிப்பிடுவதாக கூறி டைட்டிலையும், படத்தில் இருக்கும் கதாபாத்திரங்களின் பெயர்களையும் மாற்ற சொல்லி கௌதமி கூறுவதாக இயக்குனர் வாராகி தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அந்த இரண்டு நபர்களிடமும் இருந்து அவர்கள் பெயரை பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் (NOC) வாங்கி கொடுத்தால் படத்திற்கு சான்றிதழ் வழங்குவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் நிபந்தனை விதித்துள்ளாராம்.

யாரை குறிப்பிடுகிறது என்பதை எழுத்துபூர்வமான உத்தரவாக கொடுங்கள்.. நான் அவர்களிடம் இருந்து அனுமதி கடிதம் பெற்று தருகிறேன் என கூறினால் அதற்கு கௌதமி நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டாராம்.

கணவரை அடிக்கடி மாற்றும் பெண் பற்றிய கதை இது. அவரின் சொந்த வாழ்க்கை பற்றி இருக்கிறதோ என அவர் நினைத்து தான் இப்படி சிக்கல் ஏற்படுத்துகிறார் என கூறியுள்ள இயக்குனர், இதற்கு தீர்வு கிடைக்கும் விதத்தில் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டப்போவதாக

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *