“ராஜாவுக்கு செக்’ வைக்க சேரன் தான் தேவைப்பட்டார்” ; இயக்குநர் சாய் ராஜ்குமார்

இயக்குநர் சேரன் மீண்டும் நடிப்பு, இயக்கம் என சுறுசுறுவென தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஒரு பக்கம் ‘திருமணம்’ படத்தை இயக்கி நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் ‘ராஜாவுக்கு செக்’ படத்திலும் நடித்து முடித்துவிட்டார்.

இதில் ராஜாவுக்கு செக் படம் எமோஷனல் திரில்லராக புதுவிதமான சேரனை நமக்கு காட்டும் படமாகத் தயாராகியுள்ளது. இந்த படத்தை இயக்கியுள்ளார் சாய் ராஜ்குமார். பெயர் புதிது போல் தோன்றினாலும், ஏற்கனவே ’ஜெயம்’ ரவியை வைத்து தமிழில் ’மழை’ என்கிற படத்தை இயக்கிய அதே ராஜ்குமார் தான் இவர்.
கொஞ்ச காலம் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றுவிட்டு தற்போது சாய் ராஜ்குமார் ஆக மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். இந்த படம் குறித்த சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் சாய் ராஜ்குமார்.

“ ‘ராஜாவுக்கு செக்’ படத்தின் கதையை உருவாக்கி முடித்ததுமே இதில் யார் நடித்தால் சரியாக இருக்கும் என்கிற கேள்வி எழுந்தபோது முதல் ஆளாக என் மனதில் தோன்றியவர் சேரன் தான்.. காரணம் சில விஷயங்களை சிலர் சொன்னால்தான் அது சேரவேண்டிய இடத்திற்கு சரியாக சென்று சேரும். இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு முக்கிய பிரச்சனையை மத்திம வயதில் உள்ள அதேசமயம் மக்களுக்கு நன்கு அறிமுகமான சேரன் போன்ற ஒரு நடிகர் சொன்னால் மட்டுமே அது பொதுமக்களிடம் சரியான விதத்தில் சென்று சேரும் என உறுதியாக நம்பினோம். படத்தின் ரிலீஸ் தேதி குறித்து முறையாக அறிவிக்கப்படும்” என்கிறார் இயக்குநர் ராஜ்குமார்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *