‘தேவராட்டம்’ பற்றி இயக்குனர் முத்தையா…!!!

முத்தையா இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தேவராட்டம்’. இதில் கவுதம் கார்த்திக் கதாநாயகனாகவும், மஞ்சிமா மோகன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் இயக்குனர் முத்தையா பேசும்போது,

“நான் படிப்பில் மிடில் கிளாஸ் தான். இந்தப்படத்தில் வேலை செய்த எல்லோருமே படித்தவர்கள். ஹீரோ, கேமரா மேன், இசை அமைப்பாளர் இவர்களோடு வேலை செய்வது மனைவியோடு லைப் நடத்துவது போல. சரியாக இல்லாவிட்டால் சிக்கல் தான். ஞானவேல்ராஜா சாரிடம் கொம்பன் படம் நேரத்திலே கவுதமை வைத்து படம் எடுக்கலாம் என்றேன்.

அவர் கார்த்தியைத் தாரேன் என்றார். ஆனால் இன்று ஞானவேல்ராஜா சார் படத்தில் கவுதம் கார்த்தி இருக்கிறார் இதுதான் அவரது வளர்ச்சி. கொம்பன் படம் எனக்கு நல்ல அடையாளம். தேவராட்டம் சாதிப்படம் கிடையாது. எனக்கு அது தெரியவும் தெரியாது. குடும்ப உறவுகளைப் பற்றிய படம் தான் இது”.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *