டைரக்டர்ஸ் கிளப் மூன்றாம் ஆண்டு விழா…!!!

டைரக்டர்ஸ் கிளப் என்பது உதவி இயக்குனர்கள் சேர்ந்து உருவாக்கிய ஒரு வாட்ஸ் அப் குரூப்.இதன் மூலம் சினிமா துறை சார்ந்த எந்த சந்தேகங்களையும் தீர்க்கும் வண்ணம் திரை துறை சார்ந்த சாதனையாளர்களை தொடர்பு கொண்டுதெளிவுபடுத்தி கொள்ளலாம்.அவ்வகையில் திரைத்துறை ஜாம்பவான்களான திரு.A .R முருகதாஸ்,திரு.S .S .ராஜமௌலி,திரு.சந்தோஷ் சிவன் போன்ற எண்ணற்ற சினிமா பிரபலங்கள் வளரும் இளம் இயக்குனர்களுக்கு வழிகாட்டியாக இந்த குரூப்பில் இணைந்து அவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்தியுள்ளார்.

இயக்குநர்களாக சாதிக்க விரும்பும் இளைய தலைமுறைக்கு ஒரு அங்கீகார மேடையாக திகழும் டைரக்டர்ஸ் கிளப்பின் மூன்றாம் ஆண்டு விழா சென்னை சாந்தோம் DEAF & DUM பள்ளியில் மே 19 ஞாயிறன்று மாலை 5.00 மணிக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் திரு.சேரன்,திரு.பாக்கியராஜ்,திரு.இலன்,திரு.பார்த்திபன் தேசிகன்,திரு.கோபி நாயனார்,திரு.ரியோ,மற்றும் டேனி ,அமித் பார்கவ்,ஆனந்திமற்றும் ஒளிப்பதிவாளர் திரு.நிரன் சந்தர்,தடம் படத்தின் இசையமைப்பாளர் அருண்ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்களும்,உதவி இயக்குனர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.பறையிசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *