அசுரன் திரைப்படத்தில் இணைந்த முன்னணி இயக்குநர் .!

`வட சென்னை’ படத்தை தொடர்ந்து தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி ’அசுரன்’ படத்தில் இணைந்திருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கும் நிலையில், `காதல்’, `வழக்கு எண் 18/9′ உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தற்போது இவரின் கதாபாத்திரம் வெளியாகியுள்ளது. அசுரன் படத்தில் பாலாஜி சக்திவேல் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் பாலாஜி சக்திவேலுடன் நடிகர் பசுபதி, சுப்பிரமணிய சிவா ஆகியோர் நிற்கிறார்கள்.
தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *