என் நடன திறமையை மட்டுமே காட்ட முடிகிறது, நடிப்பு திறமையை அல்ல – தமன்னா.!

தமன்னா நடிப்பில் கண்ணே கலைமானே, தேவி 2 படங்கள் வெளியாக உள்ளன. சில நாட்களுக்கு முன்னர் வெளியான கே.ஜி.எப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். சரியான வாய்ப்புகள் வராததால் தான் தமன்னா ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் நிலைக்கு ஆளானதாக செய்தி பரவியது.

ஐதராபாத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தமன்னா ’சினிமாவில் எனது ஆரம்ப நாட்களில் எனக்கு நடனத்தால் தான் முக்கியத்துவம் கிடைத்தது. ஆனால் நடிகைகளுக்கு அவர்களது நடனத் திறமையை காட்ட மிக அரிதாகவே நடிக்கும் படங்களில் வாய்ப்பு கிடைக்கிறது.ஆனால் நான் மட்டுமே பிரதானமாக இருக்கும் விசே‌ஷமான பாடல்களில், எனது நடனத் திறமையைக் காட்ட எனக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கிறது’. மேலும் எவ்வளவு பெரிய இடத்திற்கு சென்றாலும் நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பேன் , இவ்வாறு தமன்னா தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *