கஸ்தூரி ராஜா இயக்கத்தில்அகோரியாக நடிக்கும் ஜாக்கிஷெராப் பேட்டி..!

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கும் பாண்டி முனி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..

இந்த அனுபவம் பற்றி ஜாக்கிஷெராப் கூறியதாவது:

இதில் நான் அகோரியாக நடிக்கிறேன்,டைரக்டர் கஸ்தூரிராஜா கதையை சொன்னவுடன் இது எனக்கு புது மாதிரியான காரக்டராக இருக்கும் என்று நினைத்து ஓ.கே.சொன்னேன்.ஆரண்ய காண்டம் மாயவன் மாதிரி இது வேறு ஒரு கதைக்களம்,என் உருவத்தை மட்டும் அல்ல,என் நடை உடை பாவனை எல்லாவற்றையுமே இது மாற்றும் படமாக இருக்கும்.

டைரக்டர் என்ன சொன்னாரோ அதை அப்படியே நான் பிரதிபலிக்கிறேன், நானாவது இந்த கதையில் ஆறு மாதங்கள் தான் ஊறி இருக்கிறேன் ஆனால் இயக்குனர் ஆறு ஆண்டுகளாக இதை டிரீம் சப்ஜெக்டாக சுமந்து கொண்டிருக்கிறார்.

சிவபக்த அகோரியாக நடிக்கிறேன், நல்லது செய்யும் முனீஸ்வரன் என்ற அகோரிக்கும் எல்லோரையும் அழிக்க நினைக்கும் பாண்டி என்கிற பேய்க்கும் நடக்கிற போராட்டம் தான் கதை.
அகோரி என்றால் ஆ…ஊ என்று கத்தி கலாட்டா செய்யும் அகோரி வேடமல்ல அமைதியால் எதையும் வெல்ல முடியும் என்கிற சிவ பக்த அகோரி வேடம், எனக்கே இது புது வேடம் தான்.

டைரக்டர் சொன்னதை சிறப்பாக செய்திருப்பதாக உணர்கிறேன்…
என்னை பொருத்தவரை இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் தான் என் எஜமானர்கள்,ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் என்னை உட்புகுத்தி அதற்கு சம்பளம் உடை சாப்பாடு கொடுக்கிற அவங்களை என்றைக்கும் நான் மறக்க மாட்டேன்.
நான் அடிக்கடி சென்னை வருவேன்,80 ம் வருட நடிகர் நடிகைகள் சந்திப்பு நடக்கும் போதெல்லாம் வருவேன்,ரேவதி ராதிகா எல்லாம் எனக்கு நல்ல நண்பர்கள்.

இவ்வாறு ஜாக்கி ஷெராப் கூறினார்..

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *