அஜித்துடன் இணையும் இசையமைப்பாளர் ஜிப்ரான் …!!!

`நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படமான ‘தல 60’ படத்தையும் எச்.வினோத்தே இயக்குகிறார். இது வினோத் அஜித்துக்காக எழுதிய சொந்த கதையாகும். பெரிய பட்ஜெட்டில் ஆக்‌‌ஷன் படமாக இது உருவாகவுள்ளது.

இந்த நிலையில், இப்படத்திற்கு இசையமைக்க ஜிப்ரான் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் அஜித்தை சந்தித்த ஜிப்ரானிடம் ‘இணைந்து பணியாற்றலாம்’ என்று அஜித் கூறியதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார் ஜிப்ரான்.

தற்போது வெளியான செய்தி அதனை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. ஜிப்ரான் ஏற்கனவே வினோத்தின் தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *