ஜோதிகாவின் புதியபடம் திட்டமிட்டபடி நிறைவடைந்தது…!!!

ஜோதிகா நடித்து 2D எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்து கல்யாண் இயக்கியுள்ள படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று சிறப்பாக முடிந்திருக்கிறது. படத்தில் ஜோதிகாவோடு நடிகை ரேவதி, நடிகர்கள் யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் இயக்குநர் கல்யாண் ஏற்கெனவே ‘குலேபகாவலி’ படத்தை இயக்கியவர்.இன்னும் பெயரிப்படாத இப்படத்திற்கு ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் இசை அமைத்துள்ளார். படத்தின் எடிட்டர் விஜய். இப்படத்தில் தயாரிப்பாளர் சூர்யாவோடு இணை தயாரிப்பாளராக இராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்துள்ளார்.

சென்னை பின்னி மில்லில் பாடல் காட்சிகள் படம் பிடிக்கப் பட்டதோடு மொத்தம் 35 நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் திருப்திகரமாக முடித்துள்ள படக்குழு போஸ்ட் புரொடக்சன் பணிகளை விரைவில் துவங்க இருக்கிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *