கமல் பட நாயகியை நடுரோட்டில் தாக்கிய கொள்ளையர்கள் .!

கமலின் நடிப்பில் கடந்த 1993ல் வெளியான கலைஞன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் பர்ஹீன். இவர் பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

திருமணம் ஆன பின்பு முழுவதுமாக டெல்லியில் செட்டில் ஆன இவர் அங்குள்ள வணிக வளாகம் ஒன்றிற்கு தனது காரில் சென்றுள்ளார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த கொள்ளையர்கள் அவரது காரிலிருந்த 16 ஆயிரம், மொபைல் போன் மற்றும் ஆவணங்களை திருடியுள்ளனர். அப்போது அவர்களை தடுத்த பர்ஹீனையும் அவர்கள் சரமாரியாக அடித்து தப்பி ஓடிவிட்டனர்.இதுகுறித்து பர்ஹீன் போலீஸில் புகார் செய்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *