“கண்ணே கலைமானே” படத்திற்கு “U” சான்றிதழ்…

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `கண்ணே கலைமானே’.

உதயநிதி ஸ்டாலின், தமன்னா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி, ஷாஜி சென், வசுந்தரா காஷ்யப், வெற்றிக்குமாரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். உதயநிதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தணிக்கை குழுவில் `யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் படத்தின் இசை விரைவில் வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து படத்தை வருகிற அக்டோபரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *