மோகன் லாலுக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்…!!!

முன்னணி நடிகையாகிவிட்ட கீர்த்தி சுரேசுக்கு தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் பெரிய மார்க்கெட் உருவாகி இருக்கிறது. அவருக்கு 3 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்க தயாராக உள்ளனர்.

ஆனால் அவர் யாரும் எதிர்பாராத வகையில் மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். மோகன்லால் – பிரியதர்‌ஷன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் மராக்கர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்.

பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகி வரும் இந்தப் படத்தில் மோகன் லாலின் ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்புக்கொண்டுள்ளார். தன்னை அறிமுகப்படுத்திய கூட்டணி என்பதால் நன்றிக்கடனுக்காக 5 ஆண்டுகள் கழித்து மலையாளத்தில் நடிக்கிறார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *