மீண்டும் நடிக்க வரும் கன்னக்குழி அழகி…!!!

கள்ளழகர் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை லைலா. பார்த்தேன் ரசித்தேன், தீனா, தில் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து தன் குழந்தைத்தனமான முகத்தினால் வசீகரித்தார். திருமணம் ஆகி சினிமாவில் இருந்து ஒதுங்கியவர் மீண்டும் நடிக்க வந்ததை பற்றி கூறும்போது,

“தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் சுவாரசியமான வேடமாக இல்லை. நான் இப்போது மிக கவனமாக தேர்ந்தெடுத்து நல்ல கதாபாத்திரங்களை மட்டுமே நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

இப்படித்தான் நடிப்பேன் என குறிப்பிட்டு சொல்ல முடியாது. வில்லி வேடமோ, நகைச்சுவை பாத்திரமோ, குணச்சித்திர வேடமோ எதுவாக இருந்தாலும் ரசிக்கும்படியாக இருக்க வேண்டும். அவ்வளவு தான். அதுபோன்ற கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறேன்.”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *