மனிஷா யாதவ்வை இயக்கும் ராம்நாத்…!!!

சமீபத்தில் மனிஷா யாதவ் நடிப்பில் வெளியான ‘ஒரு குப்பை கதை’ படம் விமர்சனரீதியாக வரவேற்பு பெற்றது. அதைத்தொடர்ந்து இரு படங்களில் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.

‘திருநாள்’ படத்தை இயக்கிய ராம்நாத் இயக்கும் அடுத்த படத்தை வெற்றிமாறன் தயாரிக்கிறார். துப்பறியும் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் கிராமப்புறத்தைச் சேர்ந்த பெண்ணாக மனீஷா நடிக்கிறார்.இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க உள்ளது.

இதுதவிர அறிமுக இயக்குநர் மில்கா செல்வகுமார் இயக்கும் ‘சண்டா முனி’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஹாரர் காமெடியில் தயாராகும் இந்தப் படத்தில் நட்ராஜ், யோகி பாபு ஆகியோருடன் மனீஷா நடிக்கிறார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *