மிஸ்டர்.லோக்கல் – பத்திரிகையாளர் சந்திப்பு…!!!

மிஸ்டர்.லோக்கல் படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. நேற்று இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் இயக்குநர் ராஜேஷ் பேசியதாவது,

“எனக்கு ரொம்ப எமோஷனலான படம் இது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, கிட்டத்தட்ட 15 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பிரபல நடிகர்களை வைத்து படம் தயாரித்தவர். முதல் முறையாக எனது குடும்பத்தில் வெளியே ஒரு நடிகரை வைத்து படம் பண்ணுகிறேன். இந்த படம் எனக்கு பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார். அதன்பின்னர் இந்த படத்தை ஹிட்டாக்க பல்வேறு விதமாக யோசித்தேன்.

அப்போது சிவா என்னிடம், இந்த படத்தில் டாஸ்மாக், குடிப்பது போன்ற காட்சி, பெண்களை திட்டுவது போன்ற பாடல்கள் இவையில்லாமல் ஒரு குடும்ப படமாக பண்ணலாம் என்றார். படம் ஆரம்பிக்கும் போது இந்த இரண்டு விஷயங்கள் மட்டுமே எனது எண்ணத்தில் இருந்தது. அதை சிறப்பாக செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *