தமிழில் அறிமுகமாகும் கேரள இசையமைப்பாளர்…!!!

தன்ஷிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘யோகி டா’. கவுதம் கிருஷ்ணா இயக்கி வரும் இந்த படத்தில் தன்ஷிகாவுடன் கபீர் துஹான் சிங், சாயாஜி ஷிண்டே, மனோபாலா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதை காதல், ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகி வருகிறது.

ஜட்பட்மா சினிமாஸ் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தீபக் தேவ் இசையமைப்பாளராக
ஒப்பந்தமாகியுள்ளார். இவர் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற `லூசிபர்’ படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கவுதம் கிருஷ்ணா – ஹிமேஷ் பாலா இணைந்து இந்த படத்திற்கு வசனம் எழுதுகின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக எஸ்.கே.பூபதியும், படத்தொகுப்பளராக ஜி.சசிகுமாரும், ஸ்டண்ட் இயக்குனராக கணேஷும் பணியாற்றி வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *