எளிய வாழ்க்கையை விரும்புகிறேன்- நித்யாமேனன்…!!!


முன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் படம் “த அயன்லேடி” இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார் நித்யாமேனன். “சைக்கோ”,”மிஷின் மங்கல்” ஆகிய படங்களில் நடிக்க உள்ளார்.

நித்யா மேனன் அளித்த பேட்டியில்:- “நடிகர்-நடிகைகளை ரசிகர்கள் பார்க்கும் கோணம் வேறு. எங்களை நாங்களே பார்த்துக் கொள்ளும் கோணம் வேறு. பிரபலமான நடிகை என்ற உணர்வு எனக்கு இல்லை.

நடிகை என்ற ரீதியின் ரசிகர்களுக்கு என்மீது எதிர்பார்ப்புகள் இருக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை நடிகை நித்யாவாக இல்லாமல் சாதாரணமான எளிமையான நித்யாவாக இருக்கவே ஆசைப்படுகிறேன்.

படப்பிடிப்பில் வேலை செய்து சோர்வாகும் போதெல்லாம் இயற்கை எனக்கு சக்தி கொடுக்கிறது. நம்மோடு நாம் தொடர்பு கொண்டால்தான் இயற்கையோடு தொடர்பு கொள்ள முடியும். எனக்கு தேவையான சக்தி எல்லாவற்றையும் இயற்கையில் இருந்துதான் எடுத்துக்கொள்கிறேன். இயற்கையை மட்டுமே எனது வாழ்வின் வழிகாட்டியாக பார்க்கிறேன்.” இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *