ரசிகர்களை புகழ்ந்து தள்ளும் ஓவியா…!!!

சமீபத்தில் இலங்கையில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு ஓவியா ரசிகர்களிடமும், அங்குள்ள ஊடகங்களிடமும் கலந்துரையாடல் நிகழ்த்தி உள்ளார். அப்போது பேசிய ஓவியா,

“தமிழில் பேச கொஞ்சம் கொஞ்சம் இலக்கண பிழை இருக்கிறது.நான் ஒன்றுமே பண்ணாமல் இவ்வளவு அன்பு கிடைத்திருப்பது சந்தோ‌ஷமாக இருக்கிறது. எனக்கு இதற்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை, இருந்தாலும் நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்.

முன்பைவிட இப்போது எங்குச் சென்றாலும் மக்கள் என்னை அடையாளம் கண்டு விடுகிறார்கள். இதற்கு முன் அவ்வாறாக இல்லை. உங்களின் அன்பிற்கும், ஆதரவுக்கும் எப்போதும் நான் நன்றிக்கடன் பட்டவளாக இருக்கிறேன். இனிமேலும் இருப்பேன். இன்று நான் உலகம் முழுவதும் பேசப்படுபவளாக இருப்பதற்குக் காரணம் உங்களின் ஆதரவும், அன்பும் மட்டுமே” என்றார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *