கதை திருட்டை பற்றி இயக்குனரின் கருத்து…!!!.

மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். ஆழ்வார்பேட்டையில் குழந்தைகளுக்கான ஓவியக் கண்காட்சியை திறந்து வைத்த ரஞ்சித் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

திரையுலகை கதை திருட்டு என்ற வி‌ஷயம் அச்சுறுத்துகிறதே என்ற கேள்விக்கு

“கதை திருட்டில் நிறைய வி‌ஷயங்கள் இருக்கின்றன. உண்மை பொய் இரண்டுமே இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பதே மிகப்பெரிய சவாலான வி‌ஷயம். படைப்பாளி என்பவன் யார், உண்மையிலேயே அங்கிருந்து திருடினாரா என்ற கேள்வி இருக்கிறது.

அப்படி திருடிய பின்பும் அதை எப்படி நிரூபிக்க வேண்டும் என்ற கேள்வியும் இங்கிருக்கிறது. தான் எழுதிய கதையைப் பதிவு செய்ய வேண்டும் என்றெல்லாம் திட்டமிடல் யாரிடமும் இல்லை. தற்போது அந்தச் சூழல் உருவாகி எல்லோருக்கும் பயம் வந்திருக்கிறது. இனி கண்டிப்பாகப் பதிவு செய்வார்கள் என்று நினைக்கிறேன்.”இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *