ஸ்ரீரெட்டிக்கு வக்காலத்து வாங்கும் ஹீரோயின்..!!!

பூனம் கவுர், ‘பயணம்’, ‘என் வழி தனி வழி’, 6 மெழுகுவர்த்திகள், வெடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,சினிமாவில் பாலியல் தொல்லைகள் நடிகைகளுக்கு இருப்பதாக ஒப்புக்கொண்டார். மேலும் தயாரிப்பாளர் ஒருவர் மீது பரபரப்பு புகார் ஒன்றையும் கூறியுள்ளார்.

தயாரிப்பாளரின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய பூனம் கவுர், முன்னணி தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவர் தன்னுடைய படங்களை பார்த்து புகழ்ந்தார் என்றும், தன்னை அலுவலகத்தில் வந்து சந்திக்க கூறியதாகவும் தெரிவித்தார்.

மேலும் பேசிய பூனம் கவுர், அந்த தயாரிப்பாளர் தனக்கு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும் கூறினார். இதையடுத்து எனது அம்மாவுடன் அவரது அலுவலகம் சென்றேன். அப்போது அவரின் முகம் மாறியது. என் அம்மாவுடன் அலுவலகம் வந்ததை அவர் விரும்பவில்லை. இதனால் அந்த தயாரிப்பாளர் என்னிடம் சரியாக கூட முகம் கொடுத்து பேசவில்லை. இதுவரை அந்த தயாரிப்பாளர் கூறியபடி எனக்கு எந்த வாய்ப்பும் தரவில்லை. சினிமாவில் நடிகைகள் பல்வேறு அவமானங்களை சந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *