வித்தியாசமான தயாரிப்பாளர்…!!!

எங்கு சென்றாய் என் உயிரே படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர்.வி.பாண்டி தனது படத்தை பார்க்க வருமாறு ரசிகர்களை அழைத்துள்ளார். ஆனால் ரசிகர்கள் முன்வராத நிலையில், டிக்கெட் வாங்கி, அதனை குறைந்த விலைக்கு ரசிகர்களிடம் கொடுத்து படத்தை பார்க்க அனுப்பினார்.

மேலும் படம் பார்த்தவர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் டிக்கெட் காசுடன் 100 ரூபாய் தருவதாக கூறினார். உங்களை திருப்திபடுத்தும் வகையில் நகைச்சுவை, பாடல், கதை உங்களை கண்டிப்பாக கவரும். தயவுசெய்து என்னுடைய படத்தையும் பார்ப்பதற்கு திரையரங்குக்கு வாருங்கள். சிறிய படங்களையும் ஆதரியுங்கள் என்று ஆதங்கத்தோடு கூறினார். இதனை பார்த்து சிலர் அவரிடம் டிக்கெட் வாங்கி படம் பார்க்க சென்றனர்.

இவ்வாறாக தமிழ் சினிமாவில் உருவாகும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைப்பதில்லை என்பது பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் குரலாக உள்ளது. எனவே சிறிய படங்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டால் சிறிய படங்களுக்கும் வரவேற்பு பெறும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *