லிப்ட்டில் ராதிகா ஆப்தேவின் அனுபவம்…!!!

தன்னுடன் நடித்த நடிகர் மீது ராதிகா ஆப்தே புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது,

“எனக்கு சமீபத்தில் நடந்த ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தபோது எனது முதுகில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்தேன். படப்பிடிப்பு முடிந்த பிறகு நான் தங்கி இருந்த ஓட்டலுக்கு திரும்பினேன். எனது அறைக்கு செல்வதற்காக ஓட்டல் லிப்டில் ஏறினேன்.

அதே லிப்டில் என்னுடன் நடித்த நடிகரும் வந்தார். நாங்கள் இருவர் மட்டுமே லிப்டில் இருந்தோம். அந்த நடிகர் லிப்டுக்குள் திடீரென்று என்னிடம் அத்துமீறி பேசினார்.

உங்களுக்கு நள்ளிரவில் ஏதேனும் உதவி தேவை என்றால் என்னிடம் சொல்லுங்கள். நான் வந்து உங்கள் முதுகை தடவி விடுகிறேன் என்றார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். அந்த நடிகரை பற்றி தயாரிப்பாளரிடம் புகார் செய்தேன். பிறகு அந்த நடிகர் என்னிடம் மன்னிப்பு கேட்டார்.” இவ்வாறு ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *