அழகிய ராட்சஷி பேய் அவதாரம் எடுக்கிறார்…!!!

எஸ்.ஜே.சூர்யாவிடம் பணிபுரிந்த வினோ வெங்கடேஷ் இயக்கும் திகில் படத்தில் ராய் லட்சுமிக்கு முன்னணி கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. திகில் படமாக உருவாகும் இந்த படத்திற்கு சின்ட்ரல்லா என்று தலைப்பு வைத்துள்ளனர்.

படம் பற்றி இயக்குநர் கூறும்போது,

“சின்ட்ரெல்லா திகில் கதையம்சம் உள்ள படம். ராய் லட்சுமி பேயாகவும், இசைக்கலைஞராகவும் இருவேடங்களில் வருகிறார். ஏற்கனவே 8 கதைகளை கேட்டு அவற்றில் நடிக்கும் யோசனையில் இருந்த ராய் லட்சுமிடம் சின்ட்ரல்லா கதையை சொன்னதுமே மற்ற படங்களை தவிர்த்து விட்டு இதில் நடிக்க வந்துவிட்டார்.

அவரது சினிமா வாழ்க்கையில் இது முக்கிய படமாக இருக்கும். படத்தின் ஒரு பகுதியில் குழந்தைகளுக்கு பிடித்த வி‌ஷயங்களும், இன்னொரு பகுதி பயமுறுத்துவதாகவும் இருக்கும். பேய் வேடத்துக்கு ராய் லட்சுமி 4 மணிநேரம் மேக்கப் போட்டு நடிக்கிறார்.”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *