ராஜா ராணி சீரியல் புகழ் ஆல்யா மானசாவை காரிலிருந்து நடுரோட்டில் இறக்கிய சஞ்சீவ் -எதற்காக???

பிரபல தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் ராஜா-ராணி. இந்த சீரியல் மூலம் நிஜ காதலர்களாக மாறியவர்கள் ஆல்யா மானசா-சஞ்சீவ்.

தங்களது காதலை உறுதிப்படுத்திய பிறகு இவர்கள் இருவரும் நிறைய பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். அப்போது ஒரு பேட்டியில் சஞ்சீவ், ஆல்யா மானசாவை நடுரோட்டில் பழிவாங்கிய விஷயம் குறித்து பேசியுள்ளனர்.

அதாவது ஆல்யா மானசா ஏதோ தவறு செய்துவிட்டார் என்பதால் சஞ்சீவ் அவரை நடுரோட்டில் இறக்கிவிட்டு மிகவும் சத்தமாக தன்னை காதலிக்கிறேன் என கூற சொன்னாராம். முதலில் கூச்சத்துடன் மெதுவாக சொன்ன ஆல்யாவை சத்தமாக சொல் என சஞ்சீவ் கூற, யாரும் பார்க்காத வண்ணம் சத்தமாக கூறிவிட்டு காருக்குள் ஏறிவிட்டாராம் ஆல்யா.

இதை அவர்கள் மிகவும் கலகலப்பாக கூறியுள்ளார், அதோடு சஞ்சீவ் காதலியை இப்படி செய்ய சொல்லாமல் யாரை கூறுவது எனவும் கூறுகிறார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *