தள்ளிப்போகிறதா 2.0 ரிலீஸ்…?

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்ககிய எந்திரன் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தின் இரண்டாம் பாகம் 2.0 பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ஏமி ஜாக்சன் நாயகியாகவும், இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமா வில்லனாகவும் நடித்துள்ளனர்.

ரூ.450 கோடி செலவில் உருவாகும் இப்படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டிருந்த நிலையில், வருகிற நவம்பர் 29-ஆம் தேதி படம் ரிலீசாகம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் மிரட்டலாக இருக்கும் என பேசப்படுகிறது. இந்திய படங்களில் பாகுபலியை தொடர்ந்து கிராபிக்ஸ் சாதனைகளில் பேசப்படும் படமாக இப்படம் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகளில் மேலும் தாமதம் ஏற்பட்டு உள்ளது என்றும், எனவே படம் அடுத்த வருடத்துக்கு தள்ளிப்போகும் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *