வெண்ணிலா கபடி குழு-2 வில் நடிதுள்ள நிஜ கபடி வீரர்கள்…!!!


2009-ம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் கபடி போட்டியை மையமாக வைத்து இயக்கிய “வெண்ணிலா கபடி குழு” வெளிவந்து பெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தின் மூலம் நடிகர்கள் விஷ்ணு விஷால், புரோட்டா சூரி, இயக்குனர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழ் சினிமாவில் அங்கீகாரம் கிடைத்தது.

தற்போது சுசீந்திரனின் மூலக்கதையில் செல்வசேகரன் இயக்கத்தில் “வெண்ணிலா கபடி குழு 2” திரைப்படம் உருவாகி இருக்கிறது. சாய் அற்புதம் சினிமாஸ் சார்பாக பூங்காவனம், ஆனந்த் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

கதாநாயகனாக விக்ராந்த், கதாநாயகியாக அர்த்தனா பினு நடித்துள்ளனர். மேலும் பசுபதி, புரோட்டா சூரி, கிஷோர், அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படதில் நிஜ கபடி வீரர்கள் கலந்து கொண்டு நடிதுள்ளனர். இப்படத்தின் மின்னொளி கபடி போட்டியை 8 நாட்கள் தொடர்ந்து தத்ரூபமாக படமாக்கி உள்ளனர். வருகிற 12-ந் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *