நாயகியாக சாக்‌ஷி அகர்வால்…!!!

மாடல் அழகியான சாக்‌ஷி அகர்வால், மலையாளத்தில் ஓராயிரம் கினாக்கள் படத்தில் பிஜு மேனனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் ரஜினி நடிப்பில் வெளியான ‘காலா’ படத்திலும், அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்திலும் நடித்திருக்கிறார்.

வில்லியம் ஷேக்ஸ்பியரின் உலக பிரசித்தி பெற்ற ‘மெக்பெத்’ என்ற நாடகம் தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக தமிழில் திரைப்படமாகிறது. இப்படத்திற்கு ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தக் கதைக்கு திரை வடிவம் கொடுத்து இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார் இயக்குநர் அனீஸ். இவர் ஏற்கெனவே ‘திருமணம் எனும் நிக்காஹ்’ என்ற படத்தை இயக்கியவர்.

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு 96 புகழ் சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் கதாநாயகர்களாக சதீஸ் நீநாசம், சரண் சஞ்சய்யும் நடிக்கிறார்கள். தற்போது கதாநாயகியாக சாக்‌ஷி அகர்வால் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *