கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா…!!!

சமந்தா கதாநாயகியாக நடித்து இந்த வாரம் வெளியாகி இருக்கும் யு டர்ன் படமும் பெரிய வெற்றி பெற்றதோடு அவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்துள்ளது. இது சமந்தாவுக்கு உற்சாகம் அளித்து இருக்கிறது.

நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷ் வேடத்தில் நடித்து இருக்கலாம் என்று தோன்றியதா? என கேட்டதற்கு ‘கீர்த்தி சுரேசுக்கு ‘நடிகையர் திலகம்’ படம் மூலமாக ஒரு நல்ல வாய்ப்பு வந்தது. அதை நன்கு பயன்படுத்திக்கொண்ட அவர், தன் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி, அனைவரையும் தன்னைப் பற்றி பேச வைத்தார். அசர வைத்தார். உரிய வாய்ப்புகள் வந்தால், எல்லோரும் தங்கள் திறமையை நிரூபிப்பார்கள். நானும் அதுபோன்ற வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்’ என்றார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *