சிம்பு தான் அடுத்த சூப்பர் ஸ்டார் – சீமான் அதிரடி .!

நாம் தமிழர் கட்சியின் மகராஷ்டிரா மாநில கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பில் அம்மாநில பொறுப்பாளர் கனகமணிகண்டன் உருவாக்கிய ‘‘இன எழுச்சி முழக்கம்’ பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது:-
தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனிமேல் என் தம்பி சிலம்பரசன்தான். அவரை வைத்து 3 படங்கள் எடுக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன். அவர்தான் ரியல் சூப்பர் ஸ்டார். எல்லோர்கிட்டயும் கதை கூறினேன். ஆனால் மற்றவர்கள் பயந்தார்கள். ’நான் நடிக்கிறேன் அண்ணா’ என்று சிம்பு துணிச்சலாக சொன்னார்.எனது இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் தீபாவளிக்குத் திரைக்கு வரும். படம் முக்கியமான வி‌ஷயங்களை பேசும். சிம்பு நேர்மையானவர், துணிவானவர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *