பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்…!!!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் எஸ்.கே.16 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் துவங்கிய நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காரைக்குடி செல்லவிருக்கிறது.

பக்கா மாஸ் குடும்ப படமாக உருவாகும் இந்த படத்திற்காக காரைக்குடியில் பிரம்மாண்ட திருவிழா செட் அமைக்கப்படுகிறது. அங்கு முக்கிய காட்சிகளை படமாக்க பாண்டிராஜ் முடிவு செய்துள்ளாராம். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அனு இம்மானுவேலும், தங்கையாக ஐஸ்வர்யா ராஜேசும் நடிக்கிறார்கள்.

கடைக்குட்டி சிங்கம் படம் அக்கா, தம்பி பாசத்தை மையமாக வைத்து உருவான நிலையில், எஸ்.கே.16 பாசமலர் பாணியில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகுவதாக கூறப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு இணையாக ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரம் இருக்கும் என்கிறார்கள்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *