சமூக பிரச்னையை பேசும் “ப்ளூ வேல்”…!!!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘புளூவேல்’ (Blue Whale) என்ற விளையாட்டால் பலர் தங்கள் உயிரை இழந்தது உலகத்தையே உலுக்கியது. அதை மையப்படுத்தி ஒரு சமூக திரில்லர் படமாக உருவாகும் படம் தான் ‘புளூவேல்’. சில மணி நேரத்தில் நடக்கும் கதையே இப்படம். அதை விறுவிறுப்பாக படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சமீப காலமாக தன் நடிப்புத் திறமையால் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் பூர்ணா, இந்த படத்தில் காவல்துறை உதவி ஆணையாளராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிறுவன் கதாபாத்திரத்தில் மாஸ்டர் கபீஷ் கன்னா நடிக்கிறார். இவரின் பெற்றோராக கேரளாவைச் சேர்ந்த பிர்லா போஸ் மற்றும் திவ்யா நடிக்கின்றனர்.

டி.ரங்கநாதன் இயக்கும் இப்படத்திற்கு பி.சி.ஷிவன் இசையமைக்கிறார். பியாண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டி.மது மற்றும் 8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பி. அருமை சந்திரன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பும், வெளியாவதற்கான பணிகளும் ஒரே நேரத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *