மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகும் டாப்சி…!!!

வெற்றி மாறன் இயக்கிய ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் டாப்சி. அதற்குபிறகு வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 போன்ற படங்களில் நடிதுள்ளார். எனினும் அவரால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை. பிறகு டாப்சி திடீரென இந்திக்குத் தாவினார்.

moviebenchpark.com

அமிதாப்பச்சனுடன் நடித்த ‘பிங்க்’ படத்தின் மூலமாக இந்தி சின்மாவில் அவருக்கு நல்ல வரவேற்புகள் கிடைத்தது. பிறகு இவர் பாலிவுட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். மேலும் இவரிடம் நான்கு இந்திப்படங்கள் உள்ளன. இவர் படங்களை தேர்வு செய்வதில் முன்னணி இந்தி நடிகைகளுக்கே சவாலாக இருந்துவருகிறார்.

இந்நிலையில் தெலுங்கில் வெளியாகி ஹிட்டான ஆர்.எக்ஸ்100 படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆதிக்கு ஜோடியாக டாப்சியை நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. டாப்சி அதிக சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *