வனிதாவுக்கு சாபம்விட்ட மஞ்சுளா அவர்களின் வீடியோ இனையதளத்தில் பரவுவிவருகிறது…!!!

1970களில் வெளியான பல படங்களில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி.ராமராவ், கமல்ஹாசன், ரஜனிகாந்த் எனப் பல நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர் விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டார்.

விஜயகுமாருக்கு இவர் இரண்டாவது மனைவி ஆவார். இவர்களுக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று பிள்ளைகள். இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு மூத்த மகளான நடிகை வனிதா, குடும்பத்தாருடன் தகராறு செய்தார்.

தனது தந்தை விஜயகுமார், தனது தங்கையின் கணவர் ஹரி, தனது அண்ணன் அருண்விஜய் ஆகியோர் தனது மகனை தன்னிடம் இருந்து பிரித்து தன்னை அடித்து துன்புறுத்துவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இதைத்தொடர்ந்து நடிகர் விஜயகுமாரும் அவரது மனைவி மஞ்சுளா விஜயகுமாரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய மஞ்சுளா இப்படி ஒரு ராட்சசி என் வயிற்றில் பிறந்தான்னு நினைக்கும்போது, பெத்த வயிறு பத்தி எரியுது. என் கணவரை பற்றியோ எனது மகன் அருண் விஜயை பற்றியோ, எனது மருமகன் ஹரியை பற்றியோ ஒரு வார்த்தை பேசினாலும் அழிந்துதான் போவாள் என சாபமிட்டார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *