விஜய் சேதுபதி,ஜெயம் ரவிக்கு கோரிக்கை வைத்த நடிகர்…!!!

உதயா நடித்து தயாரித்து இருக்கும் ’உத்தரவு மகாராஜா’ படம் நவம்பர் 16-ம் தேதி வெளியாகிறது.படத்தின் நாயகன் உதயா, விஜய்சேதுபதி, ஜெயம் ரவிக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.

“நவம்பர் 16-ம் தேதி சிறிய பட்ஜெட்டில் தயாரான படங்களை மட்டும் வெளியிட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒப்பதல் அளித்தது.இதன் படி நான் நடித்த ‘உத்தரவு மகாராஜா’ உள்பட சில படங்களுக்கு மட்டுமே அனுமதியளித்தனர்.

இதைத் தொடர்ந்து படத்தை விளம்பரப்படுத்தும் பணியைத் தொடங்கியிருக்கிறேன். தற்போது விஜய் சேதுபதி நடித்த சீதக்காதி மற்றும் ஜெயம் ரவி நடித்த அடங்க மறு ஆகிய படங்களும் அந்த தேதியில் வெளியாக இருப்பதாக கேள்விப்படுகிறேன்.

இந்த இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வந்தால் மற்ற சிறிய பட்ஜட் படங்கள் பாதிக்கப்படாதா?ரசிகர்கள் என்னைப் பார்க்க வருவார்களா? அல்லது அண்ணன் விஜய் சேதுபதி, ஜெயம் ரவி ஆகியோர்களை பார்க்க வருவார்களா… அதனால் விஜய் சேதுபதி மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் மனம் வைத்தால் நானும் ஏனைய சிறிய பட்ஜட் படங்களும் வாழ முடியும்.”என்று கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *