மீண்டும் திரைப்படத்தில் நடிகை லட்சுமி…!!!

2014-ம் ஆண்டு வெளியான கொரியன் படம் ‘மிஸ் க்ரானி’. சீனா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளது.

Naan Suvasikkum Sivaji Book Launch Photos

இந்தியாவில் முதலில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதன் கதைப்படி வயதானவர் மற்றும் இளமையானவர் என்ற இரண்டு கதாபாத்திரங்களிலுமே சமந்தா நடிக்க திட்டமிட்டு இருந்தார்.

சமந்தாவுக்கு வெளிநாட்டு மேக்கப் நிபுணர்களை வரவழைத்து பாட்டி வேடத்துக்கான மேக்கப் போட்டு பார்த்துள்ளார்கள்.ஆனால் அது சரியாக அமையவில்லை.

எனவே கொரியன் படத்தில் செய்தது போல வயதான தோற்றத்துக்கு ஒரு நடிகையையும் இளமையான தோற்றத்துக்கு சமந்தாவையும் நடிக்க வைக்க போகிறார்கள். அந்த வயதான தோற்றத்தில் மூத்த நடிகை லட்சுமியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *