நடிகை இனியாவின் ஆல்பத்தை வெளியிட்டுள்ளார் யுவன் சங்கர் ராஜா…!!!


தமிழில் வெளியாகி தேசிய விருது பெற்ற படம் “வாகை சூடவா”. இப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை இனியா. தற்போது தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளிலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இசை மற்றும் நடனம் மீது காதல் கொண்டவர் இனியா. தற்போது ‘மியா’ என்கிற வீடியோ இசை ஆல்பத்தை தானே சொந்தமாக தயாரித்துள்ளார். இந்த இசை ஆல்பத்தை பிரபல இசை வெளியீட்டு நிறுவனமான ’டிவோ’ மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் ’யு1’ ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளார் இனியா.

இதுபற்றி இனியா கூறுகையில், “ முதன்முறையாக நடனத்துடன் இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல விரைவிலேயே தனது நிறுவனம் மூலம் திரைப்படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறேன்” என்று கூறினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *